சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் பேரவைத் தலை வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு, தமிழக அமைச்சர்கள் நேற்று சென்னையில் இருந்தனர். இதையடுத்து, சென்னை கோயில் களில் நடந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சென்னை, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்றார்.
அதேபோல், பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, கச்சாலீஸ்வரர் கோயிலில் செய் தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர்.
நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் கால்நடைத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி, பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருகம் பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.என்.ரவி, முன்னாள் அமைச்சர் பி.வளர்மதி, தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசாமி கோயிலில், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். இதே போல், அமைச்சர்கள் பலரும் பல்வேறு கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்துகொண்டனர்.