ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் அடங்கிய ‘தெய்வீகக் காதல்’ என்ற நூலை நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நாளை வெளியிடுகிறார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ‘யோகதா சத்சங்க சொஸைட்டி ஆப் இந்தியா’ அமைப்பின் நிர்வாகி சுவாமி பவித்ரானந்தர் நேற்று கூறியதாவது:
யோகதா சத்சங்க சொஸைட்டியின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் அடங்கிய ‘தி டிவைன் ரொமான்ஸ்’ என்ற ஆங்கில நூல் ‘தெய்வீகக் காதல்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் வரும் 4-ம் தேதி சனிக்கிழமை (நாளை) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீஸ்ரீ பரமஹம்ச யோகானந் தரின் பக்தரான நடிகர் ரஜினி காந்த் இந்நூலை வெளியிடுகி றார். யோகதா சத்சங்க சொஸைட் டியின் பொதுச் செயலாளர் சுவாமி ஸ்மரணானந்த கிரி, பொருளாளர் சுவாமி சுத்தானந்த கிரி ஆகியோர் நூல் பற்றியும், பரமஹம்ச யோகானந்தர் பற்றியும் உரையாற்ற உள்ளனர்.
யோகதா சத்சங்க சொஸைட்டி யின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு இந்நூல் தமிழில் வெளி யிடப்படுகிறது. வாழ்க்கையின் புதிர்களை அறிந்துகொள்ள ஆர்வ மாக இருக்கும் அனைவருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடவுள் என்பவர் யார்? அவரை எப்படி நம் வாழ்க்கையின் வழிகாட்டியாக மாற்ற முடியும்? உடல், மனத்தை ஆரோக்கியமாக வைப்பதன் மூலம் முடிவில்லாத சக்தியைப் பெறுவது எப்படி? மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? தீய சக்திகளிடம் இருந்து நம்மை எப்படி விடுவித்துக் கொள்வது? என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்நூல் விடையளிக்கிறது.
யோகதா சத்சங்க சொஸைட்டி ஆப் இந்தியாவின் தலைமையகம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது. இதுதவிர இமயமலை, டெல்லி, கொல்கத்தாவில் ஆசிர மம் உள்ளது. 200-க்கும் அதிகமான தியான மையங்கள் உள்ளன. உலகெங்கும் பல்வேறு கல்வி நிலையங்கள், மருத்துவமனை களை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு பவித்ரானந்தர் கூறினார். பிரம்மச்சாரி நிரஞ்சனா னந்தர், ஹரி ஆகியோர் உடனிருந் தனர்.