தமிழகம்

தி.நகர், புரசை, பாரிமுனையில் 110 இடங்களில் கண்காணிப்பு கேமரா: தீபாவளிக்கு பொருட்களை வாங்க குவியும் மக்கள்

செய்திப்பிரிவு

தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தீபாவளிக்கு பொருட்களை வாங்க வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்புக்காக 110 இடங்களில் கண் காணிப்பு கேமராக்களை போலீஸார் வைக்கவுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வருகிற 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர். இதனால் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருட்டு கும்பலும் தங்கள் கைவரிசையை காட்ட தயாராகியிருப்பார்கள். அவர் களை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

110 கண்காணிப்பு கேமராக்கள்

தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங் களை போலீஸார் ஏற்கெனவே கணக்கெடுத்து வைத்துள்ளனர். இங்கு மொத்தம் 110 கண்காணிப்பு கேமராக் களை நிறுவி பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த இடங்களில் ஏற்கெனவே 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மீதமுள்ள இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை வைத்து கூட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தி.நகரில் 3 இடங்களிலும் புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப் பேட்டையில் தலா 2 இடங்களிலும் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து தொலைநோக்கி மூலம் கூட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

மாறுவேடத்தில் போலீஸார்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடும் கும்பலைச் சேர்ந்த 19 பேரை சென்னை போலீஸார் முன்கூட்டியே கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரது புகைப்படங்களை விரைவில் வெளியிடவுள்ளனர். திருடர் களை கண்டுபிடிக்க மக்கள் கூட்டத்துக் குள் மாறுவேடத்தில் போலீஸார் நடமாடு கின்றனர். மேலும், ஒலிபெருக்கிகளை அமைத்து எச்சரிக்கை அறிவிப்பை போலீஸார் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். துணை ஆணையர்கள் பகலவன், ராமகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT