தமிழகம்

இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை: டிடிவி தினகரன் பேட்டி

செய்திப்பிரிவு

இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் வாங்கிக் கொடுக்க லஞ்சம் பெற்றதாக டெல்லியில் சுகாஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''இரட்டை இலை சின்னம் தொடர்பாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் யாரோ திட்டமிட்டு இச்செயலில் ஈடுபடுகிறார்கள். இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதற்காக லஞ்சம் பெற்ற சுகாஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது.

நான் பெங்களூர் செல்ல புறப்படும் நேரத்தில் தொலைக்காட்சியைப் பார்த்தபோதுதான் டெல்லியில் சுகாஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதே தெரியும்.

அவர் என்னிடம் பணம் வாங்கினாரா? அவர் எங்கு பணம் வாங்கினார்? இதுதொடர்பாக டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினால் அதற்கு பதில் அளிப்பேன். இப்பிரச்சினையை சட்டப்படி சந்திப்பேன். இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசனை மேற்கொண்டேன்.

இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை'' என்றார் தினகரன்.

SCROLL FOR NEXT