தமிழகம்

பி.ஆர்.பழனிச்சாமி விடுதலைக்கு எதிரான வழக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

மேலூர் பகுதிகளில் சட்டவிரோத மாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பான 2 வழக்கு களில் பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர்கள் பி.ஆர்.பழனிச் சாமி, அவரது மகன் பி.சுரேஷ் குமார் ஆகியோரையும், ஒரு வழக் கில் ராம.சகாதேவன் என்பவ ரையும் விடுதலை செய்து மேலூர் நீதித்துறை நடுவர் 29.3.2016-ல் உத்தரவிட்டார். இவர்களின் விடுதலையை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பி.ஆர்.பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கோகுல் தாஸ் முன் விசாரணைக்கு வந் தது. அப்போது, “மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணி புரிந்தபோது கிரானைட் வழக்கு களை விசாரித்திருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்ப வில்லை. இதனால் இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட வேண்டும்” என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT