சென்னை புறநகரில் இருப்பதுபோல் திட்டம் மேம்படுத்தப்படுமா?
வெளியூர் ரயில் நிலையங்களில் செல்போன் மூலம் டிக்கெட் எடுக்க பதிவு செய்தும் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின் றனர். எனவே, சென்னை புறநக ரில் இருப்பதுபோல் இத் திட்டத்தை மேம்படுத்த வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர், இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்து எளிமைப்படுத்தியதால் பயணி கள் மத்தியில் தற்போது வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னையை தவிர, வெளியூர் பகுதிகளில் விரைவு ரயில், பயணிகள் ரயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் பெறும் திட்டத்தை செயல்படுத்த கடந்த 9-ம் தேதி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செயல்படுத்து வதுபோல் இத்திட்டத்தை செயல்படுத்துவதில்லை. அதாவது, செல்போன் மூலம் பயணச் சீட்டு வாங்கும் திட்டத்தில், வெறும் குறுந்தகவல் மட்டுமே செல் போனுக்கு டோக்கன் போல் வருகிறது. பின்னர், ரயில் நிலையங்களுக்கு சென்று தானியங்கி டிக்கெட் இயந்திரத்தின் முன்போ அல்லது டிக்கெட் கவுன்ட்டர்களிலோ வழக்கம்போல் வரிசையில் நின்றுதான் அந்த குறுந்தகவலை பயணச் சீட்டாக மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக தட்சிண ரயில்வே எம்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னையில் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் டிக்கெட் எடுக்க பதிவு செய்தவுடன் வரும் குறுஞ்செய்தி பயண சீட்டாகவே கருதப்படுகிறது. அதில் வண்ண அடையாளங்கள், மற்றும் பயணிகளின் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை தகவல் இடம்பெறும். மேலும் குறுந்தகவலை பயணச் சீட்டாக உறுதிப்படுத்த சோதிக்கும் கருவிகளை டிக்கெட் பரிசோதகர் கள் வைத்திருப்பார்கள்.
ஐந்து கி.மீ. தூரத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களுக்கான பயணச்சீட்டுகள் பெறவும் இதில் வழி வகை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த புதிய நடைமுறை வெளியூரில் அமல்படுத்தவில்லை.
இதனால், செல்போனில் டிக்கெட் பதிவுசெய்து ரயில் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை புறநகர் ரயில்களில் இடம்பெறும் திட்டம் போல் மேம்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.