தமிழகம்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்

செய்திப்பிரிவு

எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர் என்.கண்ணையா திட்டவட்டம்

ரயில்வே ஊழியர்களின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படாவிட் டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர் என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தியும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகே எஸ்ஆர்எம்யூ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக மத்திய அமைச்சரவை குழு உறுதியளித்தபடி 30 சதவீத வாடகைப்படி மற்றும் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, 50 சதவீத உத்தரவாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரயில்வே தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பி.ஆர்.சி. தேர்வில் 20 சதவீத முன்னுரிமை வழங்க வேண்டும். ரயில்வேயில் தனியார்மயம், 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. பிபேக் தேப்ராய் கமிட்டி அறிக்கையை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர் என்.கண்ணையா, தலைவர் ராஜாதர், உதவி பொதுச் செயலர் ஈஸ்வர்லால் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

என்.கண்ணையா பேசும் போது, “ரயில்வே துறையில் 4 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் செய் கிறோம். ஏற்கெனவே 35 சதவீதம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே துறை முழுவதையும் தனியார்மய மாக்கி லட்சக்கணக்கான தொழி லாளர்களை வெளியேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக கடந்தாண்டு ஜூன் மாதமே அறிவித்திருந்தோம். மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், ரயில்வே அமைச்சர் ஆகியோர் ரயில்வே தொழிலாளர்களின் பிரச்சினை களை தீர்ப்பதற்கான குழுவை அமைத்தனர். எனவே பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத் தோம். ஆனால் இதுவரை தொழி லாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

எனவே அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு சார்பில் புதுடெல்லியில் ஏப்ரல் மாதம் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT