தமிழகம்

அதிமுகவில் நத்தம் விஸ்வநாதன் பதவி நீக்கம்

செய்திப்பிரிவு

அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ''அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் விஸ்வநாதன் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிட்டது.

SCROLL FOR NEXT