தமிழகம்

பிளஸ் 2 வேதியியல் பொதுத் தேர்வில் ‘தியரி’ பகுதியில் இருந்து அதிக வினாக்கள்: விடையளிக்க நேரம் போதாததால் மாணவர்கள் கவலை

செய்திப்பிரிவு

பிளஸ் 2 வேதியியல் பொதுத் தேர்வில் தியரி பகுதியில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட் டன. கேள்விகள் எளிதாக இருந்த போதிலும் விடையளிக்க நேரம் போதவில்லை என்று தேர்வெழுதிய மாணவர்கள் கவலையுடன் கூறினர்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. ஏற்கெனவே, தமிழ் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வு, ஆங்கிலம் மற்றும் வணிகவியல், மனையியல், புவியியல் தேர்வு கள் முடிந்துவிட்டன. தேர்வு தொடங் கிய 6-வது நாளான நேற்று வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் நடைபெற்றன. மருத் துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் மதிப் பெண்ணும் பார்க்கப்படும். வேதி யியல் தேர்வு முக்கிய பாட தேர்வாக இருந்ததால் வழக்கமான பறக்கும் படையினருடன் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் ஒவ்வொரு மாவட் டத்திலும் பல்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வேதியியல் தேர்வில் தியரி பகுதி யில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. கேள்விகள் எளிதாக இருந்த போதிலும், விடை யளிக்க நேரம் போதவில்லை என்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் கவலையுடன் கூறினர்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவி கள் கூறுகையில், ‘‘1 மார்க், 3 மார்க், 5 மார்க் 10 மார்க் கேள்விகள் அனைத்தும் எளிதாகவே இருந் தன. 1 மார்க் பகுதியில் மட்டும் ஒரு சில வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. அந்த கேள்விகளை பாடத்தின் உள்ளே இருந்து கேட் டிருந்தார்கள். பொதுவாக வேதி யியல் தேர்வில் “சம்” எனப்படும் கணக்கு தொடர்பான கேள்விகள் அதிகம் இருக்கும். ஆனால், இந்த முறை ‘தியரி’ பகுதியில் இருந்து அதிக வினாக்களை கேட்டுவிட்ட னர். எனவே, ஒவ்வொரு கேள் விக்கும் நீண்ட நேரம் பதில் அளிக்க வேண்டியிருந்தது. இதனால், விடையளிக்க நேரம் போத வில்லை” என்று தெரிவித்தனர்.

வேதியியல் வினாத்தாள் குறித்து சென்னை கிரசென்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியை செலின் கூறுகையில், ‘‘வினாத் தாளைப் படித்துப் பார்த்தேன். எளிதாகவே இருந்தது. ஒரு மார்க் பகுதியில் மட்டும் ஒருசில கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்டிருக்கிறார்கள். மற்றபடி வினாத்தாள் எளிதுதான். மாணவிகள் குறிப்பிட்டதைப் போல இந்த முறை ‘தியரி’ பகுதியில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால் விடை எழுத நேரம் போதாமல் இருந்திருக்கலாம்” என்று குறிப் பிட்டார்.

SCROLL FOR NEXT