உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளதாக ஓபிஎஸ் அணிக்கு சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.
முன்னதாக, 98 சதவீதம் கட்சிக்காரர்களும், பொதுமக்களும் எடப்பாடி பழனிசாமி அணியின் பின்னால் இருக்கிறார்கள் என்பது உண்மை என்று நினைத்தால் உள்ளாட்சி தேர்தல் தேதியை முதல்வர் உடனடியாக அறிவிக்கத் தயாரா?. இதை சவாலாக நாங்கள் முன்வைக்கிறோம் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ''எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அணி தயாராக உள்ளது. இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம்'' என்றார்.