முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழக மின் வாரிய பொறியாளர்கள் யூனியன் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
இந்நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி தமிழக மின் வாரிய பொறியாளர்கள் யூனியன் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை தாங்கினார். 100க்கும் மேற்பட்ட மின் வாரிய பொறியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.