தமிழகம்

பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது

செய்திப்பிரிவு

பண மோசடி வழக்கில், நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டார். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி தருவதாக பலரிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சில நாட்களுக்கு முன் சென்னை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆறு வழக்குகள் உள்ளன. டெல்லியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 கோடி கடன் வாங்கி தருவதாக கமிஷன் வாங்கி ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் டெல்லி காவல் துறையும் இவரைக் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அத்தனை வழக்குகளிலும் ஜாமீன் வாங்கிய சீனிவாசன், தொடர்ச்சியாக படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். ஒரு வழக்கு விசாரணைக் காக சீனிவாசன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து சிவகாசி காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்களைக் கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT