தமிழகம்

தீம்தரிகிட லாவண்யா

வா.ரவிக்குமார்

பெண்கள், நளினமான வாத்தியங்களைத்தான் வாசிக்கமுடியும் என்பதைப் பொய்யாக்கி, ராஜ வாத்தியத்தை வாசிக்கும் ராணியாக மிளிர்கிறார் லாவண்யா.

இசைப் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் துளிர்விட்ட கொழுந்து இவர். இவரின் தந்தை குமரநல்லூர் ராஜாமணியே இவரின் முதல் குருவாக அமைந்தவர். அப்போது, லாவண்யாவுக்கு 3 வயது. 12 வயதில் லயமேதை குருவாயூர் துரையிடம் சிட்சையைத் தொடர்ந்தார்.பத்து வயதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியமாக மிருதங்கத்தை வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

2003இல் கோழிக்கோட்டில் அகில இந்திய வானொலி நிலையத்தால் பி ஹை கிரேட் ஆர்டிஸ்ட்டாக அங்கீகரிக்கப்பட்டார். மூத்த வயலின் கலைஞர் கன்னியாகுமரி, இளம் கலைஞர்களான சுமித்ரா வாசுதேவ், சுமித்ரா நிதின், அம்ரிதா வெங்கடேஷ், காஷ்யப், சுசித்ரா, நித்யா - வித்யா சகோதரிகள் ஆகியோருக்கு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்.

இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அஞ்சலி நிகழ்ச்சியான கீதம் மதுரம் நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க மகளிர் இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி இது. 1999இல் நடந்த ராஷ்ட்ரிய யுவ உத்சவ் போட்டியில் மிருதங்க வாசிப்பில் முதல் இடத்தை வென்றிருக்கிறார். இவரது கணவர் மும்பை சுப்பிரமணியனுக்கும் இவருக்கும் எத்துணைப் பொருத்தம்... அவரும் மிருதங்க வித்வான். அற்புதமான தாளமாலிகா!

SCROLL FOR NEXT