தமிழகம்

ஆர்.கே.நகரில் முதல்வர் 6-ம் தேதி சுற்றுப்பயணம்

செய்திப்பிரிவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை வரும் 6-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அன்று மாலை 3 மணி அளவில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட எம்ஜிஆர் சிலை - பெட்ரோல் நிலையம், காசி மேடு, சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக, வீரராகவன் சாலை செல்கிறார்.

அங்கிருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை, குறுக்கு சாலை, அருணாசலேஸ்வரர் கோயில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு, வஉசி சாலை சந்திப்பு வருகிறார். பிறகு இளைய முதலி தெரு, வைத்தியநாதன் பாலம், ஜெ.ஜெ.நகர் சந்திப்பு, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ் சாலை சந்திப்பு வழியாக வாக் காளர்களுக்கு நன்றி தெரிவித் தபடி வரும் முதல்வர் ஜெயலலிதா, மகாராணி திரையரங்கம் பகுதியில் பயணத்தை முடிக்கிறார்.

SCROLL FOR NEXT