தமிழகம்

சென்னை ஐஐடி மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஐஐடி மாணவர்கள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந் தனர்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம், சாலை மறியல்கள் நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் கவுதமன் தலைமையில் கிண்டி மேம் பாலத்துக்கு பூட்டு போடப் பட்டது.

இந்நிலையில், தமிழக விவ சாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கிண்டியில் உள்ள மாணவ, மாணவிகள் 50 பேர் ஐஐடி வளாகத்துக்குள் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

SCROLL FOR NEXT