சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை, தமிழகத்தில் நாளுக்குநாள் அதி கரித்து வருகிறது. சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகள் ரத்தம் சுத்திகரிப்பு செய்ய ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மேற்கொள்வது மிக முக்கியம். ஒரு ‘டயாலிசிஸ்’ இயந்திரத்தைக் கொண்டு ஒரு சிறுநீரக நோயாளிக்கு சிகிச்சை அளிக்க 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் தேவைப்படுகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்த முடியாத நோயாளிகள், வாரம் இருமுறை வீதம் வாழ்நாள் முழுவதும் இந்த சிகிச்சையை மேற்கொண்டே ஆக வேண்டும்.
அதனால், நடுத்தர, ஏழை நோயாளிகள், இந்த ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்கு அரசு மருத்துவ மனைகளைத்தான் நாடுகின்றனர். ஒருபுறம் அரசு மருத்துவமனைகளுக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்கு வரும் சிறுநீரக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மற் றொரு புறம், இந்த சிகிச்சையை அளிப்பதற் கான தகுதியான தொழில்நுட்ப டெக்னீஷியன் கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்களை ஆதாரமாக கொண்டு மதுரையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ், தமிழ்நாடு ‘டயாலிசிஸ்’ டெக்னீஷியன் நலச் சங்க மாநிலத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் கடந்த 2011-ம் ஆண்டு மொத் தமே 5,081 எண்ணிக்கையிலேயே ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2016-ம் ஆண் டில், அந்த எண்ணிக்கை அப்படியே 3 மடங்காக அதிகரித்து 16,119 ஆக உயர்ந்துள்ளது. 35 டயாலிசிஸ் இயந்திரங்களைக் கொண்டு சராசரியாக தினமும் 45 ‘டயாலிசிஸ்’ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கு நிகராக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் சிறுநீரக நோயாளிகள் வருகின்றனர். ஆனால், வெறும் 13 இயந் திரங்கள் மட்டுமே இங்கு உள்ளன. ஆனால், இந்த சிகிச்சையை மேற்கொள்ள தமிழகம் முழு வதும் 6 நிரந்தர டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் மட்டுமே உள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவரும் உள்ளனர்.
சென்னையைத் தவிர தமிழகத்தில் வேறு எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் நிரந்தர டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் நியமிக்கப்பட வில்லை. ஒப்பந்த அடிப்படையில் (காப்பீட்டு திட்ட நிர்வாகத்தில்) ‘டயாலிசிஸ்’ டெக்னீஷியன்கள் சொற்ப ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர். சில அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு 15 முதல் 40 நாள் பயிற்சி கொடுத்து டயாலிசிஸ் பணியில் ஈடுபடுத்துகின்றனர் என்று அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மதுரை அரசு மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நிதி பற்றாக்குறையால் நிரந்தர ‘டயாலிசிஸ்’ டெக்னீஷியன்களை நியமனம் செய்யவில்லை. ஆனாலும், இருக்கிற பணியாளர்களை வைத்து ‘டயாலிசிஸ்’ சிகிச்சை தடை இல்லாமல், தரமாக வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
தரமான ‘டயாலிசிஸ்’ சிகிச்சை இல்லாவிட்டால் ஏற்படும் ஆபத்து?
தமிழக அரசு மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்ட ‘டயாலிசிஸ்’ இயந்திரங்கள் உள்ளன. இந்த சிகிச்சை 2 முதல் 3 ஷிப்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு இயந்திரத்துக்கு 2 பேர் என்று வைத்துக்கொண்டாலே 800 முதல் 1000 டெக்னீஷியன்கள் தேவைப்படுவர். ஒப்பந்தப் பணியாளர்கள், பயிற்சி பெற்ற மற்ற பணியாளர்களைச் சேர்த்தாலே தற்போது 70 சதவீதம் ‘டயாலிசிஸ்’ டெக்னீஷியன்கள் தேவைப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 220 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகால ‘டயாலிசிஸ்’ டெக்னீஷியன் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இதுவரை 2,300 பேர் இந்தப் படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். தகுதியில்லாத டயாலிசிஸ் டெக்னீஷியன்களால் கடந்த 2014-ம் ஆண்டில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 20 சிறுநீரக நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை நோய்த் தொற்று ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின்போது ஒரே நேரத்தில் 3 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.