தமிழகம்

ஓரிரு நாளில் ராம்குமார் குணமடைந்துவிடுவார்: 7 டாக்டர்கள் கொண்ட குழு அமைப்பு

செய்திப்பிரிவு

ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்க 7 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் இன் னும் ஓரிரு நாளில் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்று டீன் நாராயணபாபு தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (வார்டு 25) அனுமதிக்கப்பட்டுள்ள ராம் குமாருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின் றனர். ராம்குமார் உடல்நிலை குறித்து ராயப்பேட்டை அரசு மருத் துவமனை பொறுப்பாளர் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டீன் டாக்டர் நாராயணபாபு கூறியதாவது:

ராம்குமார் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் மட்டும்தான் கிழிந்துள்ளது. அதற்கு தையல் போடப்பட்டுள்ளது. காயமும் ஓரளவு குணமாகிவிட்டது. மற்றபடி உணவுக் குழாய் பாதிக்கப்படவில்லை. காலையில் முதலில் இட்லியும், அதன்பின் இடியாப்பமும் ராம்குமாருக்கு கொடுக்கப்பட்டது. மதியம் சாதம் கொடுத்தோம். ராம்குமார் நன்றாக சாப்பிட்டார். அவர் வார்டுக்குள் நடக்கத் தொடங்கிவிட்டார். நன்றாக பேசுகிறார். அவருக்கு பெரிய அளவில் சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. அவருக்கு உணவுதான் சிகிச்சை. அதனால் உணவும், மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப் படுகிறது.

புழல் சிறைக்கு..

ராம்குமாரை கண்காணிக்கவும், தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கவும் காது மூக்கு தொண்டை (இஎன்டி) மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 7 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் ராம்குமார் பூரணமாக குணமடைந்துவிடுவார். அதன்பின் ராம்குமாரை போலீஸார் புழல் சிறைக்கு கொண்டு செல்வார்கள். மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகள் சிகிச்சை பெறும் வார்டில் ராம்குமாரை அனுமதிக்க அவசியம் இருக்காது.

இவ்வாறு டீன் நாராயணபாபு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT