ஆந்திராவில் வீசிய புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இன்று புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆந்திராவில் வீசிய புயல் காரணமாக, ஹவுரா - கன்னியாகுமரி (12665) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுராவில் இருந்து 13-ம் தேதி (நேற்று) புறப்படுவதற்கு பதிலாக 14-ம் தேதி (இன்று) அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும். 14ம் தேதி காலை 8.45 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842) ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, 13-ம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு புறப்பட வேண்டிய மெயில், இன்று (14-ம் தேதி) காலை 11.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயில் பல்ஹார்சா, நாக்பூர், ஜார்சுகுடா மற்றும் கரக்பூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.