கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதலாவது அணு உலையில் தொடர்ந்து 278 நாட்க ளாக மின் உற்பத்தி நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முதல் நவம்பர் 26-ம் தேதி வரை மொத்தம் 6244.2 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இந்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலுடன் நேற்று காலை 7.41 மணியளவில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. 3 மணி நேரத்தில் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஓரிரு நாளில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
2-வது அணு உலையிலும் நேற்று ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது என்று அணுமின் நிலைய வளாக இயக்குநர் எச்.என்.சாகு தெரிவித்துள்ளார்.