புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
பருவமழை பொய்த்ததன் விளை வாக ஏற்பட்ட வறட்சியால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளது. காரைக்காலில் சுமார் 4,400 எக்டேர் பரப்பில் பயிரிட்டிருந்த நெல் வறட்சியால் முழுவதும் சேதமடைந்துள்ளது. அதுபோல் புதுச்சேரியில் சுமார் 8,900 எக்டேர் பரப்பில் பயிரிட்டிருந்த நெல், மணிலா, பயறு வகைகள், கரும்பு ஆகியவை பாதிப்புக் குள்ளாகியுள்ளன. அதனால் புதுச்சேரி, காரைக்காலை வறட்சியால் பாதிக்கப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட உள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இன்னல்களை போக்கும் வகையில் உரிய இழப்பீடு தர உத்தேசிக் கப்பட்டுள்ளது.
விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவை வரவழைத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செய்து மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.