தமிழகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் ஆலை மீண்டும் திறக்கப்படும்: இயக்குநர் அசோக் திரிபாதி தகவல்

செய்திப்பிரிவு

உதகை ஹெச்.பி.எஃப். (இந்துஸ் தான் போட்டோ பிலிம்ஸ்) தொழிற் சாலை மீண்டும் திறக்கப்படும் என்று ஆலைக்கு புதிதாக நிய மிக்கப்பட்டுள்ள இயக்குநர் அசோக் திரிபாதி தெரிவித்துள் ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இந்து நகரில், 1960-ம் ஆண்டு ஹெச்.பி.எஃப். தொழிற்சாலை தொடங்கப்பட்டது. மத்திய பொதுத்துறை நிறுவனங் களில் ஒன்றான இந்த ஆலையில் புகைப்பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள், ராணுவத்தில் பயன் படுத்தப்படும் ஏரியல் பிலிம்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

தெற்கு ஆசியாவின் ஒரே பிலிம் தொழிற்சாலை என்று பெயர் பெற்ற இந்த ஆலை, உலக மயமாக்கலுக்குப் பின்னர் நலி வடைந்து, கடந்த 3 ஆண்டுகளாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதில் பணிபுரிந்த 80 சதவீத ஊழியர் களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது.

தற்போதைய மத்திய அரசு, நாடு முழுவதும் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ஆலையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் திரிபாதி, தொழிற்சாலையை நேற்று ஆய்வு செய்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், பொதுத் துறை நிறுவனங்களை புனரமைக் கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உதகை ஹெச்.பி.எஃப். தொழிற்சாலை யின் தற்போதைய பிரச்சினைகள் அனைத்தும் களையப்பட்டு விரை வில் திறக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT