தமிழகம்

மேனகா காந்தி கருத்தில் உடன்பாடு இல்லை: பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு குறித்து மேனகா காந்தி கூறிய கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் பொங்கல் பண்டிகையின்போது கண்டிப்பாக நடைபெறும் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் தடை விதித்துள் ளது. எனினும் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு கடும் முயற்சி கள் மேற்கொண்டு வருகிறது.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டு குறித்து தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. யார் என்ன கூறினாலும், பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு, அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது கண்டிப்பாக நடைபெறும். கிரிக்கெட், கபடி போன்ற விளை யாட்டுகள் கூட ஆபத்தானவை தான். சவாலை எதிர்நோக்குவது தான் மனித வாழ்க்கை.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் நன்னடத் தையின் அடிப்படையில் விடு தலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிக் கட்டு ஆபத்தான விளையாட்டு என தெரிவித்துள்ளார். இது தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த வீர விளையாட்டில் காளை கள் ஒருபோதும் துன்புறுத்தப் படுவதில்லை. எனவே, ஜல்லிக் கட்டு குறித்த தனது கருத்தை மேனகா காந்தி திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT