தமிழகம்

புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

சி.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் பாமக தனித்து போட்டியிடும் என்றும், இம்முடிவைத் திரும்பப் பெறமாட்டோம் என்று கட்சியின் மாநில செயலரும், எம்.பி வேட்பாளருமான அனந்தராமன் தெரிவித்தார்.

புதுச்சேரி பாமக மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் போட்டியிட வலியுறுத்தினர்.

கூட்டத்தின் நிறைவில் பேசிய அனந்தராமன், "என்.ஆர். காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரி அன்புமணி ராமதாஸ் முதல்வர் ரங்கசாமியை 4 முறை சந்தித்தார். பல முறை அவரை காக்க வைத்து பல மணி நேரம் கழித்தே ரங்கசாமி சந்தித்தார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்தாலும், புதுச்சேரியில் தனித்து பாமக போட்டியிடும். ரங்கசாமியை போல், நாங்களும் மோடி பிரதமராக பிரசாரம் செய்வோம். ராமதாஸ் ஒப்புதலுடன்தான் தனித்து போட்டியிடுகிறோம். கண்டிப்பாக வாபஸ் பெறமாட்டோம்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT