நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங் கிரஸ் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வசந்தகுமார் பேசியதாவது:
சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனை களை யாரும் மறுக்க முடியாது. அவர் நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக திரையிடப்பட்ட போது அவரது நடிப்பாற் றலைக் கண்டு பன்னாட்டு ஜாம் பவான்களும் பாராட்டினர். உலகின் சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோ நேரில் வந்து சிவாஜியை பாராட்டினார்.
தேச நலனில் அக்கறை கொண்ட சிவாஜி தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பினார். பாரதி யார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட் டோரின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்தார்.
அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவப் படுத்த வேண்டும். இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.