மனிதனின் அத்தியாவசிய தேவை களில் ஒன்றாக பால் உள்ளது. பாலில் புரதம், கொழுப்பு, விட்டமின்கள், உயிர்சத்து, ஊட்டச் சத்து என அனைத்தும் சரிவிகிதத் தில் கலந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் பால் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் இருப்பதில்லை. ஆனால், இந்தியாவில் பால் விலை அதிகமாக உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் பரவலாக உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லிட்டர் பால் வாங்குவோர், இனி அரை லிட்டர் பால் மட்டுமே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத் தில் ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள் ளது என்று டாக்டர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி டாக்டர்கள் மேலும் கூறியதாவது:
பால் சரிவிகித உணவு என்ப தால், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவருக்கும் ஏற்றது. பால் குடிப்பது குறைந்தால், ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் ஏற்படும். தரமில்லாத மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு டைப்பாய்டு, வயிற்றுப்போக்கு, உடல் வளர்ச்சி தடைப்படுதல், நிமோனியா காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாலின் கெட்டித் தன்மைக்காக கிழங்கு மாவு, மைதா மாவு, போன்றவற்றை அதில் கலப்படம் செய்கின்றனர். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பவுடர் மற்றும் யூரியாவும் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பாலில் கலப்படம் செய்வது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.