தமிழகம்

எய்ம்ஸ் வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய உள்ள இடத்தை அறிவிக்கக் கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் 15 மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இதனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும் என்பதை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந் தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல் வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT