தமிழகம்

திருவண்ணாமலை, சமயபுரம் கோயில்களில் குடமுழுக்கு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கடந்த 26-ம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் குடமுழுக்கு திருவிழா தொடங்கி யது. 12-வது கால யாக பூஜை நேற்று அதிகாலையில் நடைபெற் றது. அதன்பிறகு, யாக சாலை யில் இருந்து கலசங்கள் புறப்பாடு தொடங்கியது. 9 கோபுரங்களுக்கு கலசங்கள் கொண்டுசெல்லப் பட்டன. பின்னர், யாக சாலையில் அண்ணாமலையாருக்கு பூர்ணா ஹுதி நடைபெற்றது. இதையடுத்து, தல விருட்சமான மகிழ மரத்தை வலம் வந்து மூலவர் மற்றும் அம்மன் உள்ளிட்ட சன்னதிகளின் விமானங்களுக்கு புனித நீர் நிரப் பப்பட்ட கலசங்கள் கொண்டுசெல் லப்பட்டன.

இதைத் தொடர்ந்து, வேத மந்தி ரங்களை சிவாச்சாரியார்கள் முழங்க, குடமுழுக்கு விழா காலை 9.15 மணிக்கு நடைபெற் றது. ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், மேற்கு கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், ரிஷி கோபுரம் உட்பட 9 கோபுரங்கள் மற்றும் அண்ணாமலையார், உண்ணா முலை அம்மன், சம்மந்த விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளின் விமானங்கள் உள்ள கலசங்கள் மீது புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர்.

அதனைத் தொடர்ந்து கரு வறைகளில் வீற்றிருக்கும் மூலவர், அம்மன் உள்ளிட்ட 11 சுவாமிகள் மீது காலை 10.05 மணிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், மடாதிபதிகள் குன்றக் குடி பொன்னம்பல அடிகளார், நித்யானந்தா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, சின்னையா, கீழ்பென்னாத் தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சமயபுரம்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி பிப்.1-ம் தேதி சிறப்பு ஆராதனைகள் தொடங்கின. தொடர்ந்து பிப்.3-ம் தேதி யாகசாலை நிர்மாணம் செய்யப்பட்டு, அன்று மாலையில் முதல் கால யாக பூஜை தொடங்கியது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு பரிவாரம் மற்றும் பிரதான குண்டங்களுக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 7.10 மணிக்கு மாரியம்மன் தங்க விமானம், ராஜகோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. காலை 7.20 மணிக்கு மாரியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் கருவறைகளுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, தீபாராதனை நடை பெற்றது.

விழாவில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன், தமிழக முதல்வரின் கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி, கோயில் செயல் அலுவலர் க.தென்னரசு, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பொ.ஜெயராமன் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT