தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலம் குறித்த தகவல்களை தொகுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவு றுத்தி உள்ளதாக தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணைய தேசிய துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித் துள்ளார்.
கோவையில் தமிழக தலித் பீப்பிள்ஸ் அசோசியேஷன், சீடு அறக்கட்டளை சார்பில் தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகனுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மே 31-ம் தேதி ஆணையம் புதிதாக நியமிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக மாவட்ட வாரியாக கலந்தாய்வு மேற்கொண்டுள்ளோம். தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கான இடஒதுக் கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதையும், பணி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றில் இடஒதுக்கீடு ஆகியவை பின்பற்றப்படுகிறதா என்பதையும் கண்காணித்து வருகி றோம். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆக்கிரமிக்கப்பட் டுள்ள பஞ்சமி நிலம் குறித்த விவரங்களை தொகுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள் ளோம். விரைவில் அந்த நிலங் களை, உரிய மக்களுக்கு ஒப்ப டைக்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு, புகார் கொடுப்பதில் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது என்றார்.