ஜிகா வைரஸ் தொடர்பாக விமான நிலையங்களில் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக அரசு சுகாதாரத் துறை செயலாளர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகள் நலன் குறித்து கள விளம்பர அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு நிகழ்ச்சி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் நேற்று நடந்தது. இயற்கை மூலிகை செடி பெயர் கள், அதன் மருத்துவத் தன்மையை விளக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டது. கள விளம்பர இயக்குநரகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல உதவி இயக்குநர் டாக்டர் டி.செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிலரங்கத்தை தமிழக சுகாதாரத் துறை செயலர் கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்து பேசியதாவது:
சுகாதாரத் துறை பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள விளம்பர அலுவலர்களுக்கு இந்த பயிலரங்கு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கடைசி 3 மாதங் களில் வழக்கத்தைவிட காய்ச்ச லால் அவதிப்படுவோரின் எண் ணிக்கை கொஞ்சம் அதிக மாக இருக்கும். ஆனால், இவையெல் லாம் டெங்கு காய்ச்சல் என கூற முடியாது. வழக்கமாக வந்து செல்லும் காய்ச்சலாகவும் அதிக அளவில் இருக்கும். எனவே, சாதாரண காய்ச்சல் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம்.
சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. குறிப் பாக, மக்களுக்கு போதிய விழிப் புணர்வு ஏற்படுத்துதல், பாதிக்கப் பட்டோருக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை வசதி போன்ற பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூர், பொன்னேரி போன்ற பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெங்கு பாதித்த நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் தயாராக உள்ளன. நோய் அறிகுறி தென்பட் டால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்.
வாய்ப்பு இல்லை
ஜிகா வைரஸ் வளர்ந்த நாடுகளில்தான் பரவுகிறது. இந்த வைரஸ் இங்கு வர வாய்ப்பு இல்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டாம். மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். விமானங்கள் புறப்படும்போதும், வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும்போதும் கிருமி நாசினி தெளித்த பிறகே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, விமான நிலையங்களில் மருத்துவக் குழுவினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிலரங்கத்தில் தேசிய சுகாதார இயக்க மாநில இயக்குநர் டாக்டர் தாரேஸ் குமது, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழு தலைமை இயக்குநர் டாக்டர் ஆர்.எஸ்.ராமசாமி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, ‘தி இந்து’ இணைப்பிதழ் ஆசிரியர் அரவிந்தன் ஆகியோர் பேசினர்.