தமிழகம்

புதிய சட்டத் திருத்தம் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உறுதி

செய்திப்பிரிவு

நீதிபதிகள் விதிக்குழு முடிவு அறிவிக்கும் வரை, புதிய சட்டத் திருத்தம் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவில் சென்னை உயர் நீதிமன்றம் சில திருத்தங்கள் செய்தது. அதுதொடர்பான அறிவிக்கை கடந்த மே 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, புதிய சட்டத் திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட விதிக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவிடம் வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதி கள் சட்டத் திருத்தம் தொடர்பாகவும், அதில் செய்யவேண்டிய மாற்றங் கள் குறித்தும் ஆலோசனை வழங் கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து நீதிபதிகள் குழு ஆய்வு செய்து முடிவு அறிவிக்கும் வரை, புதிய சட்டத் திருத்தம் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று உயர் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. இருந்தபோதிலும், சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (ஜூலை 25) முற்றுகைப் போராட்டம் நடப்ப தாக வழக்கறிஞர்கள் கூட்டு நட வடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘‘புதிய சட்டத் திருத்தம் குறித்து வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் அளித்துள்ள ஆலோசனைகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் 5 நீதிபதிகள் கொண்ட விதிக்குழு முடிவு அறிவிக்கும் வரை வழக்கறிஞர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது’’ என்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT