தமிழகம்

பாஜக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு

செய்திப்பிரிவு

பிரச்சாரத்தின்போது சந்தித்துக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், பாஜக வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண் டனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் பகுதியில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன், கட்சி யின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டிருந்தனர்.

அதே பகுதியில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன், கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது, பாஜகவினர் 100-க்கும் மேற்பட்டோர் பிரச்சாரம் செய்தபடி வந்ததால், அவர்க ளுக்கு வழிவிட்டு ஓரமாக நின்றார் லோகநாதன். அதைப் பார்த்த கங்கை அமரன், அவ ருக்கு வழி விடுமாறு தொண் டர்களை அறிவுறுத்தினார். அப்போது வாகனத்தை நிறுத்தி விட்டு, கங்கை அமரன் அருகில் லோகநாதன் வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரி வித்துக் கொண்டனர். இந்த அரசியல் நாகரிகத்தை பார்த்த தொண்டர்களும் பொதுமக்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT