தமிழகம்

நூலகர் பணிக்கு 30-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

நூலகர், உதவி நூலகர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 30-ம் தேதி நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நூலகர், உதவி நூலகர் பணிகளில் 29 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 2,352 பேர் எழுதினர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணலுக்கு முன்பு நடத்தப்படும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 19 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும்.

SCROLL FOR NEXT