2.68 லட்சம் சதுர அடியில் 4 மாடிகளுடன் அமைகிறது
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைக்கான பிரம் மாண்ட கட்டிடம் ரூ.59 கோடியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 454 சதுர அடியில் 4 மாடிகளுடன் கட்டப்படுகிறது.
சென்னை மாநகரின் மையப் பகுதியான பூங்கா நகரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யம் எதிரே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அமைந்துள் ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரம்மாண்ட மானதும், மிகப் பழமையானது மான இம்மருத்துவமனை 1664-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் தொடங்கப்பட்டது.
தற்போது 2 ஆயிரத்து 722 படுக்கைகள், 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழ்கிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 7 மாடிகளுடன் பிரம்மாண்டமான இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் 2005-ம் ஆண்டு திறக்கப்பட்டன. 181 ஆண்டுகள் பழமையான சென்னை மருத்துவக் கல்லூரி இம்மருத்துவமனையுடன் இணைக் கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, இருதயம், கண், நீரிழிவு என 30 புறநோயாளிகள் துறைகள் உள்ளன. இங்கு அனைத்து வகையான நோய்க ளுக்கும் இலவசமாக சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமும் புற நோயாளிகளாக மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின் றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நோய்களின் சிறப்பு சிகிச்சைக்காக ஏராளமான பேர் வந்து செல்வதால் இம்மருத் துவமனை வளாகத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், புறநோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப் பதால் புறநோயாளிகள் பிரிவுக்கு பிரம்மாண்டமான கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, புற நோயாளிகள் மற்றும் இதர துறை களுக்கான கட்டிடம் கட்டும் பணி ரூ.58 கோடியே 65 லட்சம் செலவில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 454 சதுர அடியில் 4 தளங்களுடன் அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்படுகிறது.
அடித்தளத்தில் வாகன நிறுத்து மிடம் அமைக்கப்படுகிறது. தரைத் தளத்தில் வரவேற்பு அறை, அடிப்படைத் துறைகள் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை அரங்கு, இருதய தீவிர கண்காணிப்புப் பிரிவுகள் கட்டப்படுகின்றன.
முதல் தளத்தில் குடல், வயிற்றுப் பகுதி அறுவை சிகிச்சை, நீரிழிவு புறநோயாளிகள், ரத்த நாளங்கள் அறுவைச் சிகிச்சை மற்றும் பொது அறுவை புறநோயாளிகள் பிரிவு கட்டப்படுகிறது. இரண்டாம் தளத்தில் காது, மூக்கு, தொண்டை புறநோயாளிகள் சிறப்பு சிகிச்சை, குடல், வயிற்றுப் பகுதி மருத்துவத் துறைகள் இடம்பெறுகின்றன.
மூன்றாம் தளத்தில் புற்றுநோய் மருத்துவப் பிரிவு, புறநோயாளி களுக்கான புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, கதிரிய சிகிச்சை, கல்லீரல் புறநோயாளிகள் பிரிவு ஆகியன கட்டப்படுகின்றன. நான்காம் தளத்தில் அகச்சுரப்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவு, சரும நோய், கல்லீரல் சிகிச்சைப் பிரிவு கட்டப்படுகிறது.
இந்த அடுக்குமாடிக் கட்டிடத் தில் சாய்தள பாதைகள், 7 இடங் களில் படிக்கட்டுகள், படுக்கை மற்றும் 4 லிப்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படு கின்றன. இக்கட்டிடத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.