தமிழகம்

பேரூராட்சி பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

பேரூராட்சிப் பகுதியில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, பேரூராட்சிப் பகுதிகளில் வாழும், சொந்த வீடில்லாத ஏழை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த வகையில், 2016-17ம் ஆண்டில் 329 பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் 50,170 பயனாளிகளுக்கு ஒரு வீட்டுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1,580 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கான் கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத் தில் 9-ம் தேதி (நேற்று) தொடங்கி வைத்தார்.

பயனாளிகளுக்கு ஆணை

அதன் அடையாளமாக 5 பய னாளிகளுக்கு பணிக்கான ஆணை களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர் வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT