சென்னை சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், அசோக் நகர் ஆகிய இடங் களில் உள்ள வணிக வளாகங்களை இடித்துவிட்டு ரூ. 128 கோடியில் புதிய வணிக வளாகங்கள் கட்டப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசும் போது அவர் வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு:
சென்னை சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், அசோக் நகர் ஆகிய இடங் களில் உள்ள வணிக வளாக கட்டிடங் களை இடித்துவிட்டு ரூ. 128 கோடி யில் நவீன வசதிகளுடன் கூடிய வணிக, அலுவலக, குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படும்.
தமிழக அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகளில் ரூ. 20 கோடியில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறும்.
புதிய பணி நியமனம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தில் உதவி பொறியாளர்கள் 25 பேர், நில அளவையாளர்கள் 19 பேர், இளநிலை வரைவு அலுவலர்கள் 19 பேர், தொழில்நுட்ப உதவியாளர்கள் 76 பேர், இளநிலை உதவியாளர்கள் 126 பேர், தட்டச்சர்கள் 12 பேர் என மொத்தம் 177 பேர் பணியமர்த் தப்படுவார்கள்.
வீட்டுவசதி வாரியத் திட்டங் களில் ஒதுக்கீடு பெற விண்ணப்பம் அளித்தல், ஒதுக்கீடு செய்தல், குடியிருப்புகளை ஒப்படைப்பு செய்தல், ஒதுக்கீடு பெற்றதற்கான தொகை, மாத தவணைத் தொகை, வாடகை வசூல் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.
5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரிய குடியிருப்புகளில் ரூ. 20 கோடியில் வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் கடன் பட்டுவாடா மற்றும் கடன் வசூலித்தல் அனைத்தும் கணினி மயமாக்கப்படும்.
தமிழக அரசின் மருத்துவக் காப் பீட்டுத் திட்டம் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இதற்கான கட்டணத்தை கூட்டுறவு வீட்டுவசதி இணையமும், கூட் டுறவு வீட்டுவசதி சங்கங்களும் ஏற்றுக்கொள்ளும்.
சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து நாமக்கல், நாகப்பட்டி னம் ஆகிய நகரங்கள் கூட்டு உள் ளூர் திட்டக் குழுமமாக அறிவிக்கப் படும். கும்மிடிப்பூண்டி உள்ளூர் திட்டக் குழுமம் மேலும் கிராமங் களை இணைத்து விரிவாக்கம் செய்யப்படும்.
திட்ட அனுமதி அளிக்கப்பட்ட வரைபடம், ஆவணங்கள் குறுகிய ஆயுளை உடையதாலும், கரையான் மற்றும் பூச்சிகளால் சிதிலமடையும் என்பதாலும் அவற்றை கணினி வழியாக பிரதியெடுக்கும் வசதி ரூ. 1 கோடியில் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.