தமிழகம்

வாலிபர், மாணவர் சங்கம் சார்பில் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்

செய்திப்பிரிவு

பல்லாவரத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலிபர் சங்க மாநில தலைவர் எம்.செந்தில், மாணவர் சங்க மாநில தலைவர் வீ.மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தப் போராட்டத்தை திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கையால் புதிய உயர் கல்வி நிலையங்களை அரசு தொடங்காது என்று அறிவிக்கும், தாய் மொழி கல்வியை புறக்கணிக்கும், இட ஒதுக்கீட்டை நிராகரிக்கும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மறுக்கும், ஏழை எளிய மக்களுக்கு கல்வி மறுக்கப்படும், கல்வியை கார்ப்பரேட் கையில் ஒப்படைக்கும். மேலும் புதிய கல்விக் கொள்கையால் கல்வி மத்தியத்துவம், வகுப்புவாதம், வணிகமயம் ஏற்படும். எனவே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT