அதிமுக துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
அதிமுக அரசை குற்ற வாளிகளால் நடத்தப்படும் அரசு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர் சித்து வருகிறார். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் என நீதிபதி சர்க்காரியாவால் விமர் சிக்கப்பட்டவர்கள் யார், சர்க் காரியா கமிஷன் அறிக்கை வழக்காக மாறிவிடுமோ என அஞ்சி காவிரி, முல்லை பெரியாறு உரிமைகளைக் காவு கொடுத்த வர்கள் யார் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.
பழைய வீராணம் ஊழல் (நீர்), நிலக்கரி இறக்குமதி ஊழல் (நெருப்பு), பூச்சிமருந்து தெளிப்பில் ஊழல் (காற்று), மஸ்டர் ரோல் ஊழல் (நிலம்), அலைக்கற்றை ஊழல் (ஆகாயம்) என பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்த குடும்பம் யார் என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவார்கள். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், அண்ணா நகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் என உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதையும் மக்கள் அறிவார்கள்.
தண்டனை பெற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. தப்பித்துக் கொண்டவர்கள் அனைவரும் நிரபராதிகளும் அல்ல என்பதை உலகம் அறியும். ஒரு துரோகியோடு இணைந்து அதிமுக அரசை கவிழ்த்து விடலாம் என செயல் தலைவர் தீட்டிய திட்டம் கைகூடவில்லை. ஓபிஎஸ்ஸை தூக்கி எறிந்துவிட்டு, ஒரு இபிஎஸ்ஸை கொண்டுவந்து அரசியல் மாற்றம், அமைதிப் புரட்சி அதிமுகவில் நிகழ்ந்துள்ளது.
இந்த விரக்தியில்தான் அதி முகவை வன்மம் நிறைந்த வார்த் தைகளால் ஸ்டாலின் வசைபாடி வருகிறார். இனியாவது அவர் உண் மையை உணர்ந்து பேசுவதே நல்லது.