தமிழகம்

எஸ்.ஐ. காளிதாஸ் ஏற்கெனவே அடிதடி வழக்கில் சிக்கியவர்: கவுன்சிலரை தாக்கியதாக புகார்

அ.வேலுச்சாமி

இளைஞரை துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. காளிதாஸ் ஏற்கெனவே வழக்கில் சிக்கியவர் என்பதும், அதிமுக கவுன்சிலர் கொடுத்த புகாரில் இவர் மீது மதுரை அவனியாபுரம் போலீஸில் வழக்கு பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.

எஸ்.பி. பட்டினம் காவல்நிலை யத்தில் தன்னை கத்தியால் குத்தி யதால், தற்காப்புக்காக சையது முகம்மதுவை சுட்டுக் கொன்ற தாக எஸ்.ஐ. காளிதாஸ் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள் ளார். இதற்கிடையில் எஸ்.ஐ. காளிதாஸ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.ஐ. காளிதாஸ் மதுரை மேலஅனுப்பானடியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பெற்றோருடன் வசிக்கிறார். மழைநீர் வடிகால் அமைப்பு கட்டும் பணிக்காக கடந்த 20.9.2013 அன்று எஸ்.ஐ. காளிதாஸ் வீடு முன்பு மாநகராட்சியினர் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது காளிதாஸ் அந்தப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். தகவலறிந்த 56-வது வட்ட கவுன்சிலர் அதிமுகவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், இதுபற்றி விசாரித்தபோது காளிதாஸுக் கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தனது சட்டையைக் கிழித்து, காம் பவுண்டு சுவரில் தள்ளி விட்டதாக காளிதாஸ் மீது அவனியாபுரம் போலீஸில் கவுன்சிலர் சுப்பிர மணி புகார் கொடுத்தார். அதன்பேரில் கையால் அடித்து காயம் ஏற்படுத் துதல் (323), கொலை மிரட்டல் விடுத்தல் (506) ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ. காளிதாஸ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவரை காவல்துறையிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யும் சூழல் உருவானதையடுத்து, மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சில முக்கிய நபர்கள் மூலம் கவுன்சிலர் சுப்பிர மணியனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டதையடுத்து இருதரப்பும் தங்களது புகார்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக 17.10.2013 அன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்து வழக்கை முடித்துக்கொண்டனர். இதனால் அப்போது சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து எஸ்.ஐ. காளிதாஸ் தப்பித்தார்.

விளையாட்டு வீரர்

மாநில அளவில் ஹாக்கி வீரரான காளிதாஸ், விளையாட்டுப் பிரிவுக்கான இடஒதுக்கீடு மூலம் 2011-ம் ஆண்டு நேரடியாக எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டவர். பயிற்சிக் குப் பின் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காளிதாஸ், சில மாதங்களுக்கு முன்பே எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்துக்கு மாற்றப் பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT