சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
குருப் பெயர்சியை முன் னிட்டு, புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் ரூ.7,675 கோடி நிதி கேட்டுள்ளோம். நிதி கிடைத்ததும் தொழிற்சாலைகள் அமைத்தல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், மீன் அருங்காட்சியகம் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. சென்னை துறைமுகத் துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, 10 லட்சம் டன் பொருட்களைக் கையாள்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்குமான பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளன.
சரக்கு சேவை வரி திட்டத்தில் புதுச்சேரிக்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கான தொகையை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை.
இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளேன். சசிகலா புஷ்பா விவகா ரம், அதிமுகவின் உட்கட்சி விவ காரம். சசிகலா புஷ்பாவுக்கு காங் கிரஸ் எம்பிக்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை என்றார்.