பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எதிர்ப்பை மீறி தடுப்பணைகளைக் கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிகளையும் மெல்ல மெல்ல தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நீராதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. கேரள அரசின் செயலைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப் பணைகளைக் கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, கேரள அரசு தடுப் பணைகளை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. தேக்குவட்டை பகுதியில் அமையும் தடுப்பணை யின் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் முடிந்துவிட்டன. நீர்வழிப் பாதை யைத் தடுத்து, ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கான கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன. சுமார் 5 அடி உயரம் வரை தடுப்பணையின் முதற்கட்ட சுவர் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவாக இப்பணிகளை முடிக்க கேரள அரசு அறிவுறுத்தி யுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பிரதமரிடம் வலியுறுத்தி முடிவுக்காகக் காத்தி ருக்கும் நிலையில், தடுப்பணை கட்டுமானப் பணிகள் வேகமெடுத் துள்ளது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலா ளர் கு.ராமகிருட்டிணன் கூறும் போது, ‘‘கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை விரைவுபடுத்தி உள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் நீராதாரங் கள் கடுமையாக பாதிப்புக்கு உள் ளாகும். முன்கூட்டியே கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு பயனற்றதாகி விடும். எனவே அவசர வழக்காக எடுத்து தடுப்பணைகளின் கட்டு மானப் பணிகளுக்கு தடையாணை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பொதுப் பார்வையாளர் ஒருவரை நியமித்து தடுப்பணை கட்டுமானப் பணிகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். தடுப்பணைகள் கட்டும் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தினால், அனைத்துக் கட்சி சார்பில் மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.