மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற் றாண்டு விழா இந்தாண்டு கொண் டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் வரும் 30-ம் தேதி முதல் தொடர்ந்து மாவட்டந் தோறும் பெரிய அளவில் மாநாடு நடத்தப்படுகிறது. இறுதியாக சென் னையில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் பேர் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மாநாடு வரும் 30-ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதற்கான இடத்தில் தற்போது பந்தல், மேடை அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின் றன. இதற்காக அரசு சார்பில் புகைப் படக் கண்காட்சியும் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்ஜிஆர் நூற் றாண்டு விழா தொடர்பாக விவா திக்கவும், பல முக்கிய முடிவுகளை எடுக்கவும், தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் நடக்கிறது. இத்துறைகளை கவனிக்கும் முதல்வர் கே.பழனிசாமி, உறுப் பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், துறை தொடர் பான அறிவிப்புகளையும் வெளி யிடுகிறார்.
அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடப்பதால், பேரவைக் கூட் டம் இரு பிரிவுகளாக நடத்தப்பட லாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.