சிவகங்கை மாவட்டத்தில் உணவகங்களில் பாலிதீன் இலைகளை தடை செய்யவும், வாழை இலைகளை பயன்படுத்த வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்க வாழை இலைகளுடன் இளை ஞர்கள் வந்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்க வினோத்குமார் தலைமையில் சில இளைஞர்கள் வாழை இலைகளுடன் நேற்று வந்தனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வாழை இலைகளை பறிமுதல் செய்து மனுவை மட்டும் வழங்குமாறு அறிவுறுத்தினர்.
அதில், பிளாஸ்டிக், பாலிதீன் பைகளால் மண் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிப்படைகிறது. உணவுக் கழிவுகளுடன் குப்பைகளில் வீசப்படும் பாலிதீன் பைகளை கால்நடைகள் சாப்பிட்டு இறக்கும் கொடுமைகள் நடக்கின்றன. மேலும் உணவகங்களில் பிளா ஸ்டிக் வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், உணவோடு புற்று நோய் ஏற்படுத்தும் நச்சும் உடலுக்கு செல்கிறது. இதை மாவட்டம் முழுவதும் தடை செய்ய வேண்டும். உணவகங்களில் வாழை இலைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.