தமிழகம்

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை: வாழ்வின் கடைசி நேரத்தில் பேசிய செல்போன் வீடியோ பதிவால் கணவர் கைது

செய்திப்பிரிவு

நீடாமங்கலத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் செல்போனில் அவர் பேசி பதிவு செய்த வீடியோ காட்சிகள் வெளியானதால், கணவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ராயபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கவுதமன் மகள் கவுரி(24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவருக்கும் கோவில்வெண்ணியை அடுத்து உள்ள சித்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகப்பனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரதிக்சா(2) என்ற பெண் குழந்தை உள்ளது.

முருகப்பன் ஏற்கெனவே வரதட்சணை கேட்டு தொல்லை செய்ததால் கணவரை விட்டுப் பிரிந்த கவுரி, விவாகரத்து செய்வது என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தார். விவகாரத்து கோரிய வழக்கு மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உறவினர்கள் தலையிட்டு சமரசம் செய்துவைத் ததன் அடிப்படையில் நீடாமங்கலத் தில் வாடகை வீட்டில் கண வருடன் கவுரி வசித்து வந்தார். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு நீடாமங்கலம் வீட்டில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கவுரி யின் உறவினர்கள் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். கவுரியின் உடல், மன்னார்குடி அரசு மருத்துவ மனையில் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டது.

இதனிடையே, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கவுரி தனது செல்போனில் பேசி பதிவு செய்த வீடியோ வெளியானது. அதில், முருகப்பன் தன்னை கொடுமை செய்ததாகவும். அதனால் இந்த முடிவை எடுத்ததாகவும், மகள் பிரதிக்சாவை தன் தாய், தந்தைதான் வளர்க்க வேண்டும் என்றும் கவுரி கூறியிருந்தார்.

இதையறிந்த கவுரியின் உறவினர்கள், முருகப்பனை கைது செய்யும் வரை கவுரியின் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்த கோட்டாட்சியர் செல்வசுரபி மருத்துவமனைக்குச் சென்று கவுரியின் உறவினர்களிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.

இதனிடையே, நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி தலைமையிலான போலீஸார், முருகப்பனை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கவுரியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

SCROLL FOR NEXT