காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. அன்று இரவு முதலே தமிழக - கர்நாடக எல்லைகளில் பதற்றம் ஏற்படத் தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் விவசாயி கள், கன்னட அமைப்புகளின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 6-ம் தேதி முதல் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 11-ம் தேதி இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து பேருந்து போக்குவரத்து தொடங்கி யது.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கால நீட்டிப்பு செய்தது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மாண்டியா உட்பட பல்வேறு இடங்களில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. தமிழக வாகனங்கள் தீக்கிரையாயின.
இதையடுத்து, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடகாவிலும், கர்நாடக பதி வெண் கொண்ட வாகனங்கள் தமி ழகத்திலும் இயங்க அந்தந்த மாநில போலீஸார் அனுமதிப்பதில்லை.
இதுகுறித்து இரு மாநில எல்லைப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:
ஜெயம்மா(56):
தமிழகத்தில் பிறந்த என்னை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் மணம் முடித்துக் கொடுத்துள்ளனர். தற்போது ஓசூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறேன்.
இதற்காக தினமும் ஓசூர் வரவேண்டி உள்ளது. இன்னும் எத்தனை நாள் அத்திப்பள்ளியில் இருந்து ஜூஜூவாடிக்கு நடக்க வேண்டும் என தெரியவில்லை. இயல்பு நிலை திரும்ப இருமாநில அரசுகளும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ரா(32):
பெங்களுரு கோனப்பனஅக்ரஹாரா பகுதியில் உள்ள மலர்ச் சந்தையில் வியாபாரம் செய்து வருகிறேன். தினமும் ஓசூர் வந்து 50 கிலோ மலர்கள் வாங்கி, மூட்டையாக கட்டி சுமந்து செல்கிறேன். இந்தப் பிரச்சினை சீக்கிரமாக முடிந்தால் என்னைப் போன்றவர்களுக்கு நன்றாக இருக்கும்.
ஐ.டி ஊழியர் சதீஷ்குமார்:
பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஓசூரில் இருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று வந்தேன். தமிழக பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்களை, அம்மாநில போலீஸார் அனுமதிக்க மறுப்பதால், பேருந்துகளில் சிரமத்துடன் சென்று வர வேண்டிய நிலை நீடிக்கிறது. இயல்பான நிலையில் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் எல் லையைத் தொலைக்காட்சி களிலும், திரைப்படங்களில் பார்த் தது உண்டு. அதனை மிஞ்சும் வகையில் தற்போது இரு மாநில எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இரு மாநில மக்களும் சிரமத்துடன் சென்று வருவதை காணும்போது வேதனையளிக்கிறது. இரு மாநில அரசுகளும் ஒன்றிணைந்து காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
காவேரிப்பட்டணம் பிரேமா:
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள எனக்கு சிகிச்சை பெறுவதற்காக, ஒவ்வொரு மாதமும் பெங்களூரு வில் உள்ள தனியார் மருத்துவ மனைக்குச் சென்று வருவது வழக்கம்.
கடந்த 10 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள தால், தொடர்ந்து சிகிச்சை பெற பெங்களூரு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.
ஓசூரில் இருந்து ஜூஜூவாடிக்கு ஒரு பேருந்திலும், அங்கிருந்து அத்திப்பள்ளி வரை சுமார் 2 கிமீ நடந்து சென்றும், அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்தில் பெங்க ளூரு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், எங்களைப் போல பலர் அவதியுற்று வருகின்றனர்.