தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் வரலாற்று சிற்பங் கள், கலைநயம் மிக்க 86 நினைவுச் சின்னங்கள் பாதுகாக் கப்படுகின்றன. இதில் மதுரை திருமலை நாயக்கர் மகால், தஞ்சாவூர் அரண்மனை வளாகம், தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் உள்ளிட்டவை முக்கியமானவை. இந்த சின்னங்கள் அவற்றின் பழைய தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லில் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.
இது தவிர, தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு, முன்னோர்களின் பாராம்பரியம், கலை, பண்பாடு உள்ளிட்ட வரலாற்று சிறப்புகளை ஆவணப்படுத்தும் பணிகளையும் தொல்லியல் துறையினர் மேற்கொள்கின்றனர்.
சென்னை தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர் அலுவலகத்தின் கீழ், மதுரை, கோவை, தஞ்சாவூர் தொல்லியல் துறை மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவ லகங்களுக்கு கீழ் அருங்காட்சி யகங்கள் (அகழ் வைப்பகங் கள்), தொல்லியல் அலுவலர் அலுவலகங்கள் செயல்படுகின் றன. தற்போது தொல்லியல் துறையில் காணப்படும் 50 சதவீத காலிப் பணியிடங்களால், இத்துறையால் கண்டுபிடிக்கப் படும் வரலாற்று சிறப்புகளை ஆவணப்படுத்தி அவற்றை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்து வதும், அகழாய்வு மேற்கொள்வதி லும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் 2 உதவி துணை இயக்குநர் பணியிடங்களும், மதுரை, கோவை, தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குநர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதனால், காப்பாட்சியர் கள், தொல்லியல் அலுவலர்கள் இப்பணிகளை கூடுதல் பொறுப் பாக செய்கின்றனர். அதுபோல், காப்பாட்சியர், தொல்லியல் அலுவ லர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள், கல்வெட்டு எடுப்பவர், கல்வெட்டு சிற்பெழுத்தர் உள்ளிட்ட பணியிடங் களும் ஏராளம் காலியாக உள்ளன.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்ப்பதால் குறிப் பிட்ட நேரத்துக்கு துறை அலுவ லகத்துக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை அனுப்ப முடிய வில்லை. ஆய்வு முகாம்களை சரி வர செய்ய முடியவில்லை. துறை சார்ந்த வழக்கு விசாரணைகள், நினைவுச் சின்னங்கள் பராமரிப்புப் பணிகளை கண்காணிக்க முடிய வில்லை. கல்வெட்டு படி எடுப்பவர், கல்வெட்டு சிற்பெழுத்தர், சென்னையை தவிர மற்ற இடங் களில் இல்லை. அதனால், சென்னையில் இருந்துதான் இவர் களை அழைக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், கோயில்கள், பாறைகள், மலைகள் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங் களில் நடக்கும் அகழாய்வுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொல்லியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காலிப் பணியிடங்கள் பட்டியலை ஆண்டு தோறும் அனுப்பி வருகிறோம். நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என் றார்.
காலிப் பணியிடம் நீடிக்க காரணம்?
ஓர் அதிகாரி, ஊழியர் ஒய்வு பெறும் 6 மாதம் முன்பே, காலிப் பணியிடம் உருவாவது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பணியிடங்களை அடையாளம் கண்டு, அவருக்கு பதில் புதியவர்களை நியமிக்க பணி மூப்பு பட்டியல் தயார் செய்ய வேண்டும். இந்த பட்டியலில் ஒருவரை தயார் செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரி, ஊழியர் ஓய்வு பெற்ற மறுநாளே அவர்களை பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், இப்பணிகள் தொல்லியல் துறையில் சரியாக நடக்காததே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நீடிப்பதற்கு முக்கிய காரணம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.