தமிழகம்

தொலைதூரக்கல்வி மாணவர் குறைதீர்ப்பு நிகழ்ச்சிக்கு சென்னை பல்கலை. ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழக பதி வாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத் தில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வரு கிற 19-ம் தேதி (திங்கள்கிழமை) பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கட்டிடத்தில் மாணவர் குறைதீர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

தொலைதூரக்கல்வி மாணவர் கள் சேர்க்கை, மதிப்பெண் பட்டி யல், சான்றிதழ் பெறுவது தொடர்பான தேவைகள் மற்றும் இதர தீர்க்கப்படாத குறைகளை நேரிலோ அல்லது பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தை (www.ideunom.ac.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவோ இப்போதிருந்தே சமர்ப்பிக்கலாம். மாணவர்களின் குறைகளைக் குறித்த நேரத்தில் நிவர்த்தி செய்ய உரிய நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

SCROLL FOR NEXT