தமிழகம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் எளிமையான வினாக்கள்: ஆசிரியர் கருத்து

செய்திப்பிரிவு

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிமையாக கேட்கப் பட்டிருந்ததாகவும், அதிக எண் ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவார்கள் என்றும், கன்னியாகுமரி மாவட்டம் மாடத் தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல் நிலைப் பள்ளி முதுநிலை இயற்பி யல் ஆசிரியர் எஸ்.கபரியேல் ஜெலஸ்டின் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இயற்பியல் தேர்வில், ஓரளவு படிக்கும் மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெறும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக 3 மதிப்பெண், 5 மதிப் பெண் வினாக்கள் எளிதாக இருந் தன. ஒரு மதிப்பெண்ணுக்கான 30 வினாக்களில், ‘பி’ பிரிவில் 6, 10, 23 ஆகிய 3 வினாக்கள் மட்டும் மாணவர்களை குழப்பியிருக்க வாய்ப்புள்ளது. 10 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் சராசரி மாணவர்கள் பதில் அளிக்க முடியாத வண்ணம் இருந்தன.

அதேநேரம், கடந்த ஆண்டைப் போல் பாடத்திட்டத்துக்கு வெளி யிலிருந்து வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை. இயற்பிய லில் 150 மதிப்பெண்களை நன்றாக படிக்கும் மாணவர்கள் எளிதாக பெற்றுவிடலாம். எனவே, முழு மதிப்பெண் பெறும் மாணவர்க ளின் விகிதம் அதிகரிக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT