ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத் துக்கு தேமுதிக தலைவர் விஜய காந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகி யோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
எந்தவொரு திட்டமும் மக்களுக் காகத்தான் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அவர்களது கருத்துகளை கேட் காமல் தமிழகத்தில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதல்ல. குறிப்பாக கெயில் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம் போன்றவை அச்ச மூட்டக்கூடிய திட்டம் என்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் என்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கருதுவதால், அவர்களின் அனுமதி பெற்றால் மட்டுமே அவை வரவேற்புக்குரிய தாக அமையும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோன்ற திட்டங் களை கொண்டு வருவது கண்டிக் கத்தக்கது. இதுபோன்ற திட்டங் களை மற்ற மாநிலங்களில் கொண்டுவர மறுப்பது ஏன்? இந்த திட்டங்களால் கிடைக்கும் நன்மை கள் மற்றும் தீமைகளை வெளிப் படையாக அறிவித்து சரியான திட்டம்தான் என சந்தேகமின்றி நிரூபித்து அதனை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது போன்ற திட்டங்களை தேமுதிக ஆதரிக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் கருத்தை அறிந்த பிறகு திட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தாவே தெரிவித்துள் ளார். இதற்கிடையே, தமிழகத்தில் 3 , 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவ்வாறு தொடங்கி யிருந்தால் அதனை செயல்படுத் தாமல் உடனடியாக பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் ஏற் கெனவே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். கடன் தொல்லையாலும் தண்ணீர் இன்றி வறட்சியாலும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மேலும் அவர்களை பாதிப்பு அடையாமல் செய்ய ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:
பூமியின் இயற்கை வளத்தை யும், ஏழைகளின் வாழ்வாதாரத்தை யும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தந்தா லும், பின்னர் பெருநஷ்டமாகும். இந்த திட்டத்தை எதிர்த்து புதுச்சேரி முதல்வர் தனது நிலையில் உறுதி யாக உள்ளார். அவருக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர வேண்டும். விவசாயிகளுக்காக வும், தமிழக மக்களுக்காவும் மாணவர்கள் குரல் கொடுக்கின் றனர். வயதானவர்களும் மாணவர் களுக்கு இணையாக போராட்டத் தில் இறங்கியுள்ளனர். அவர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நம்முடைய தேவை களை இயற்கை பூர்த்தி செய்யும். ஆனால், ஒருவரின் பேராசைக்காக இயற்கை வளத்தை பாழ்படுத்தக் கூடாது என்று மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். இயற்கை வளத்தை அழித்து தொடங்கப்படும் எந்த திட்டத்திலும், எந்த ஒரு தனியார் நிறுவனமும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறி யுள்ளார்.