தமிழகம்

கூட்டணி உடன்பாடு தேர்தலோடு முடிந்துவிட்டது: பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

தேமுதிக, தமாகா மற்றும் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிக ளுக்கு இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு, சட்டப்பேரவைத் தேர் தலோடு முடிந்துவிட்டது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது. நீதிபதி செல்ல துரை முன்னிலையில், பிரேமலதா விஜயகாந்த் நேற்று ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம். தேமுதிக, தமாகா மற்றும் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு, சட்டப்பே ரவைத் தேர்தலோடு முடிந்துவிட் டது.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்” என்றார்.

          
SCROLL FOR NEXT