தமிழகம்

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் புதிதாக 700 மரங்கள்

செய்திப்பிரிவு

வார்தா புயலின் போது ஏராளமான மரங்கள் சேதம் அடைந்த பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து புதிதாக 700 மரங்கள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. 656 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பயிற்சி மையம் சென்னையின் முக்கியமான பசுமைப் பகுதியாக திகழ்கிறது. அண்மையில் வீசிய வார்தா புயலின் போது, இப்பயிற்சி மையத்தில் இருந்த 300 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், இப்பகுதியில் பசுமை குறைந்தது.

இந்நிலையில், இழந்த பசுமையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இப்பயிற்சி மையத்தில் புதிதாக 700 மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து இந்த மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய கமாண் டன்ட் பாபி மேத்யூ, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கள் யு.வி.மன்னூர், ஆர்.சித்தார்த் தன், சி.எஸ்.சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT